100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சியில் நூறு சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்குபதிவை பெறும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் நகர் பகுதிகளான டி.வி. எஸ்.டோல்கேட் மன்னார்புரம், கே.கே.நகர்,சத்திரம் பேருந்து நிலையம், அம்மா மண்டபம் பொன்னகர் திருவெறும்பூர் காட்டூர் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான சோமரசன்பேட்டை அதவத்தூர், போசம்பட்டி, சமயபுரம், வாளாடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


வருகின்ற ஏப்ரல் 19ம்தேதி தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 100 சதவீதம் சதவீதம் வாக்குபதிவு நடைபெறவும் பொதுமக்கள் இளைஞர்கள், இளம் பெண்கள் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் விலைமதிப்பற்ற நமது வாக்கை விற்பனை செய்யாமல் மனசாட்சிபடி நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் வாக்கை பயன்படுத்தி சரியான நபரை தேர்தெடுக்க வேண்டும் என்றும் துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி மாவட்ட முன்னாள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும்,சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.மார்ட்டின் தலைமை தாங்கி பேருந்து பயணிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இந்நிகழ்வில் வழக்கறிஞர் வின்சென்ட், சாக்ஸிடு குடும்ப நல ஆலோசகர் சசி, சமூக ஆர்வலர் பாத்திமா கண்ணன் தாய் நேசம் அறக்கட்டளை தலைவர் தப்பி சத்தியாராக்கினி, இறகுகள் அமைப்பின் நிறுவனர் ராபின், நிர்வாகிகள் மரியா மெர்சி, ஹேமலதா ,சமூக ஆர்வலர்கள் ராபி ஆர்ம்ஸ்ட்ராங், சக்திவேல் மற்றும் மாற்றம் அமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகள் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணை செயலாளர் அல்லிகொடி விளையாட்டு பிரிவு செயலாளர் சுரேஷ் பாபு இணை செயலாளர் எழில் மணி ஆரோன், சாமுவேல் லோகேஷ் ,நந்தா, கிருஷ்ணா, அலெக்சாண்டர்,ஷங்கர், பிரபு,சரவணன், மணிகண்டன், கார்த்தி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil