பொன்மலை ரயில்வே பணிமனை ஆயுத பூஜை விழாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொன்மலை ரயில்வே பணிமனை ஆயுத பூஜை விழாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை விழாவி்ல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை ஆயுத பூஜை விழாவில் தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள், மற்றும் உலக புகழ்வாய்ந்த ஊட்டி மலை ரயில் என்ஜின் பராமரிப்பு பணிகள் மற்றும் சரக்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிமனை தொடங்கி 98 வருடங்கள் ஆகிறது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பணிமனை முற்றிலும் கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் கட்டிடக்கலை வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த பணிமனையில் ஆயுதபூஜையின் முந்திய நாள் வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்கும்.

பணிமனையில் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் பகுதியை சுத்தம் செய்து, அலங்காரங்கள் செய்து வேலை செய்யும் ஆயுதங்கள் வைத்து, பொரி, பொட்டுக்கடலை, சுண்டல் ,இனிப்புகள் வைத்து வந்தவர்களுக்கு வணங்கினார்கள் ..இதில் தொழிலாளர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், வட மாநில பெண்கள், குழந்தைகள் , பள்ளி, கல்லூரி மாணவர்கள், தாய்மார்கள், பெரியோர்கள் வந்து பணிமனை சுற்றி பார்த்தார்கள்.


சென்ற ஆண்டு (2023) தண்ணீர் அமைப்பு சார்பில் டீசல் பிரிவில் ஒரு பகுதியில் துணிப்பை, மரக்கன்று, புத்தகங்கள் வழங்கி கொண்டாட்டப்பட்டது. இந்த ஆண்டு (2024) விதைப்பந்து, பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக "பிளாஸ்டிக் என்ற எமன் " என்ற புத்தகத்தை கொடுத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இதில் டீசல் பிரிவு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், பெரியசாமி , செந்தில்நாதன், ராஜகோபால் ,உதயகுமார், காளியப்பன், மகேந்திரன், உலகநாதன் அருணாச்சலம், செல்வராஜ், மார்டின் , மணிகண்டன், உத்திரவேல் ,பத்மநாபன், ஜஸ்டின் திருமுருகன், நளினி, திவ்யா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
Similar Posts
பொன்மலை ரயில்வே பணிமனை ஆயுத பூஜை விழாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெடரல் வங்கி சார்பில் திருச்சி பெரியார் கல்லூரியில் ரத்த தான முகாம்
திராவிடர் கழக பெண் நிர்வாகி மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
திருச்சி நகரின் பல பகுதிகளில்  அக்.9 ம்தேதி  குடிநீர் வினியோகம் நிறுத்தம்
முசிறி வழக்கறிஞர் அலுவலகத்தில் குட்கா: சீல் வைத்தார் எப். எஸ். ஓ.
திருச்சியில் நடந்து வரும்  புத்தக திருவிழாவில் பங்கேற்ற கவிஞர் அறிவுமதி
திருச்சி மாநகராட்சி சார்பில் கோணக்கரையில் தெரு நாய்கள் மீட்பு மையம்
திருச்சி மாநகர் மாவட்ட  காங்கிரஸ் சார்பில் காங்கிரசார் நடைபயண யாத்திரை
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது
திருச்சியில் காந்தி முகமூடி அணிந்து பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு
திருச்சி என்ஐடி யில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் துவக்க விழா
தேசிய அளவில் நடந்த தடகள போட்டியில் பதக்கம் பெற்ற வீராங்கனைகளுக்கு வரவேற்பு