லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் திருச்சியில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில், விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் லஞ்சம் கொடுப்பதை தவிர்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் பொதுமக்களிடையே லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்களை வைத்து நாடகங்களை நடத்தினர்.

முன்னதாக, சத்திரம் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்களுக்கு, கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு இசை நடனங்களும் நடத்தப்பட்டது. முன்னதாக லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பொதுமக்களிடம் வினியோகித்தனர். அப்போது பறை இசையுடன் விழிப்புணர்வு பரப்புரையில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!