உறவினர்களுக்கு தபால் அனுப்பி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் விழிப்புணர்வு

உறவினர்களுக்கு தபால் அனுப்பி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் விழிப்புணர்வு
X

அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

உறவினர்களுக்கு தபால் அனுப்பி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ஈடுபட்டனர். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் முன்னிலை வகித்தார்.

தஞ்சை காசிநாத் நூறு சதவீத வாக்குப்பதிவில் அஞ்சல் தலை சேகரிப்பாளரின் பங்கு குறித்து பேசியதாவது:-

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் விதமாக, தமிழகத்தில் அஞ்சல் உறைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் முத்திரைகள் அச்சிடப்படுகின்றன.மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள், கையொப்ப இயக்கம், ரங்கோலி கோலங்கள், வாக்காளர் உறுதிமொழி ஏற்பு மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான வாசகங்கள் இந்திய அஞ்சல் துறை மூலம் அஞ்சல் உறைகளில் முத்திரையிடப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு தலைமை அஞ்சல் நிலையங்கள், துணை அஞ்சல் நிலையங்கள்,கிளை அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து விரைவு தபால், பதிவு தபால், மணியார்டர், கடிதங்கள், பார்சல்கள் உள்ளிட்டவை வெளியூர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இதில் அந்தந்தப் பகுதியில் உள்ள பணியாளர்களின் மேற்பார்வையில் "தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா-மக்களவைத் தேர்தல் 2024' என தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் அஞ்சல் உறைகளின் மேல் முத்திரையிடப்பட்டு அனுப்பப்படுகிறது.

எனவே ஒவ்வொரு அஞ்சல் தலை சேகரிப்பாளர்களும் உற்றார், உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் கடிதம் எழுதி நூறு சதவீத வாக்குப்பதிவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என அனைவருக்கும் அஞ்சல் அட்டை வழங்கினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் உறவினர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பிய அஞ்சலட்டையில் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா மக்களவைத் தேர்தல்-2024' என தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் அஞ்சல் உறைகளின் மேல் முத்திரையிடப்பட்டு பெறுநர் விலாசத்திற்கு சென்றடைந்தது. இவ்வாறாக ஒவ்வொரு அஞ்சல் தலை சேகரிப்பாளரும் நூறு சதவீத வாக்குப்பதிவில் அஞ்சல் தலை சேகரிப்பாளரின் பங்களிப்பை அளிக்கலாம் என்றார்.

முன்னதாக பொருளாளர் தாமோதரன் வரவேற்க இணைச் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன், லட்சுமி நாராயணன், குத்புதீன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு