திருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்
திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கும் வகையில், திருச்சி மாநகரத்தில் உள்ள 6 காவல் சரகங்களின் உதவி போலீஸ் கமிஷனர்களின் தலைமையில் காலை மற்றும் மாலை வேளைகளில் முக்கிய இடங்கள் மற்றும் பிரச்சினைக்குரிய இடங்களுக்கு நேரில் சென்று, "குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்" நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கண்டோன்மெண்ட் சரகத்தில் மத்திய பஸ் நிலையம், கல்லுக்குழி ஆகிய இடங்களிலும், பொன்மலை சரகத்தில் நகை கடை, அடகுக்கடை, வங்கி உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு, கூட்டம் அரியமங்கலம் செல்வம் திருமண மண்டபத்திலும், மொராய்ஸ் கார்டன் ரன்வே நகரிலும், கே.கே.நகர் சரகத்தில் தென்றல்நகர், மற்றும் வயர் லெஸ்ரோடு ஆகிய இடங்களிலும்,
காந்தி மார்க்கெட் சரகத்தில் காந்தி மார்க்கெட், பால்பண்ணை, தாராநல்லூர் ஆகிய இடங்களிலும், ஸ்ரீரங்கம் சரகத்தில் திருவானைக்காவல், சத்திரம் பஸ் நிலையம், சிங்காரத்தோப்பு ஆகிய இடங்களிலும் மற்றும் தில்லைநகர் சரகத்தில் ஆழ்வார்தோப்பு, குறத்தெரு, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கூட்டங்களில், குற்றங்களை தடுக்கும் பொருட்டு பொது மக்கள் போலீசாரோடு இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று "குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்கள்" தொடர்ந்து நடை பெறும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu