திருச்சியில் உணவு வணிகர்களுக்கு கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
X

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு பேசினார்.

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு வணிகர்களுக்கான கலப்பட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும்போது முதல் அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த சற்றே குறைப்போம் திட்டத்தின்படி பொதுமக்கள் அனைவரும் உணவில் உப்பு சர்க்கரை ஆகியவற்றை குறைத்துக்கொள்ளவேண்டும். இவற்றை அதிகமாக உட்கொண்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றார்.

கூட்டத்தில் உணவு வணிகர்கள் சங்க தலைவர் ரங்கநாதன், துணை தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் சுந்தரேசன், துணை செயலாளர் ராஜ்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!