ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் கருத்தரங்கிற்கான விழிப்புணர்வு கூட்டம்

ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் கருத்தரங்கிற்கான விழிப்புணர்வு கூட்டம்
X

விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கான வாகன பேரணியை ஆதிதிராவிடர் நல இயக்குனர் கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் கருத்தரங்கிற்கான விழிப்புணர்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான சென்னையில் நடைபெறவுள்ள மாபெரும் கண்காட்சி மற்றும் சிறப்புக் கருத்தரங்கம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் தாட்கோ மேலாண்மை இயக்குனர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் இன்று திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான, மாபெரும் கண்காட்சி மற்றும் சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ,தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்துள்ள ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்ககள் மற்றும் மாவட்ட அளவிலான தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தை தொடங்கி வைத்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து முதலமைச்சரின்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியம் 35 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஊரகப் பொருளாதாரத்தை மட்டும் மேம்படுத்தாமல், தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தொழில் முனைவுத் திட்டங்கள் தற்பொழுது செயல்படுத்தப்படுகின்றன. மேலும், வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் வட்டியில் மானியமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 45 சதவிகிதம் மானியமாக கிடைக்கின்றது. தாட்கோ மூலம் தொழில் தொடங்கும் புதிய தொழில் முனைவோர்களைக் கண்டறியும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தொழிலில் மூலப்பொருட்களை ஒருவர் உருவாக்கித்தருகிறார். அதே பொருள் தொழில்துறையான இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைக்குச் சென்று முடிவுற்ற பொருளாக மீண்டும் அதே நபரிடம் வரும்போது கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலையில் இருக்கிறது. எனவே, சாதாரண நிலையில் உள்ள ஒருவர்தொழில் முனைவோராக முன்னேற வேண்டும் என்ற நோக்கில் வருகின்ற ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் சென்னையில் மாபெரும் கண்காட்சி மற்றும் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதன் முக்கியமான நோக்கம் தொழில் முனைவோh; குறைந்த விலையில் தரமான பொருளை வாங்க வேண்டும். அந்தப் பொருளை வாங்கி அதில் மறுபொருள் செய்யும்போது நல்ல இலாபமும் கிடைக்க வேண்டும் என்பதாகும். பல்வேறு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகளை வழங்கவுள்ள மாபெரும் கண்காட்சி மற்றும் சிறப்புக் கருத்தரங்கில் அனைவரும் பங்கேற்றுப் பயனடைய வேண்டும். மேலும், இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்/

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கு, சென்னையில் நடைபெறவுள்ள மாபெரும் கண்காட்சி மற்றும் சிறப்புக் கருத்தரங்கம் குறித்த விழிப்புணர்வை, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தினை தாட்கோ மேலாண்மை இயக்குநர் கொடியசைத்து தொடங்கி வைத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியினைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், பெரம்பலூர்;, அரியலூர் மற்றும் திருச்சியை சேர்ந்த தாட்கோ, மாவட்ட மேலாளர்கள், திருச்சி மற்றும் தஞ்சாவூர் கோட்ட செயற்பெறியாளர்கள், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர், திட்ட அலுவலர்கள், பழங்குடியின நல அலுவலர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட முன்னோடிவங்கி மேலாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story