திருச்சியில் சிறந்த சமூக சேவகர்களுக்கு குடியரசு தினவிழாவில் விருது

வழக்கறிஞர் அண்ணாதுரைக்கு விருது வழங்கப்பட்டது.
திருச்சியில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பல்வேறு தளங்களில் சமூக சேவை புரியும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் தன்னார்வலர்களுக்கு அவர்கள் ஆற்றியுள்ள சிறந்த சமூக பணிக்காக குடியரசு தினத்தன்று பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நுகர்வோர் உரிமை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்து சிறந்த சமூக பணியாற்றி வருவதரற்காக அறிஞர் அண்ணா குடிமக்கள் உரிமைகள் சட்ட பாதுகாப்பு அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை அவர்களுக்கும், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் அமைப்பின் கெளரவ தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பல்வேறு விளையாட்டு வீரர்களை ஊக்கபடுத்தி அவர்களுடைய திறமைகளை கெளரவித்தது பாராட்டுதல் மற்றும் உணவு பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பெண் குழந்தைகள் பாதுகாப்பு என பல விழிப்புணர்வு குறும்படங்கள் எடுத்தும் பல போட்டிகளில் வெற்றி பெற்றும் பல்வேறு தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.
இப்பணிகளை சிறப்பாக செய்து வருவதால் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் அவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
மேலும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் திருச்சியில் பல விழிப்புணர்வு மட்டும் சட்ட உதவிகளை செய்து வருவதற்காக அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா அவர்களுக்கும் தன்னார்வலர்களாக பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வரும் அனந்திசொளந்திரம், சிபுநிவரஞ்சனி குறும்பட இயக்குனர் ஆருத்ரா சரவணக்குமார் உள்ளிட்டோருக்கும் பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
இவ்விருதுகளை கோபால் தாஸ் ஜூவல்லர்ஸ்சின் மேனேஜிங் டைரக்டர் தில்ஜித் சி. ஷா வழங்கி கொளரவித்தார். நிகழ்வினை பிரபாகர் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் திரளான சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் போபால் தாஸ் ஜூவலலர்ஸ் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu