திருச்சியில் சாதனை மாணவர்களுக்கு நந்தவனம் பவுண்டேஷன் சார்பில் விருது

திருச்சியில் நடந்த விழாவில் சாதனை மாணவர்களுக்கு நந்தவனம் பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருச்சியில் சாதனை மாணவர்களுக்கு நந்தவனம் பவுண்டேஷன் சார்பில் விருது
X

திருச்சியில் சாதனை மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

நந்தவனம் பவுண்டேசன் ஆண்டு தோறும் சாதனை மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான விருது வழங்கும்விழா திருச்சியில் நடந்தது. நிகழ்வில் பொறியாளர் நரசிம்மன் எழுதிய நற்சுவைக் கவிதைகள், நம்மை மேம்படுத்தும் நற்பண்புகள் ஆகிய 2 நூல்கள்வெளியிடப்பட்டது.

விழாவுக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 ன் 2024- 25ம் ஆண்டுக்கான மீடியாபப்ளிசிட்டி ஆபீஸரும் இனிய நந்தவனம் கவுரவ ஆலோசகரமான கே. சீனிவாசன் தலைமை தாங்கினார். நந்தவனம் பவுண்டேசன் தலைவர்நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் என்.நல்லுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டு பேசினார். அப்போது, இது போன்ற விருது வழங்கும் விழா எதிர்காலத்தில் மாணவர்கள் இன்னும் நிறைய சாதிக்க உந்து கோலாக இருக்கும் என்றார்.

திருச்சி பாட்சா பிரியாணி உரிமையாளர் அபுபக்கர் சித்திக், ஜெர்மனி தமிழருவி வானொலி நிறுவனர் நைனை விஜயன், சசிகலா விஜயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கவிஞர் பா.சேதுமாதவன், பேராசிரியர் ஜா.சலேத் இருவரும் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பல துறைகளில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்கள்வி. ரக்ஷ்தா. (ஈரோடு) நந்தனராஜ் (ஈரோடு) ஜெயச்செல்வன் (திருச்சி) சரக்ஷ்னா (திருச்சி) எஸ். அவினாஷ். (திருச்சி)ஆகியோருக்கு சாதனை மாணவர் விருது 2023 வழங்கப்பட்டது. முன்னதாக நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா.தனபால் வரவேற்றார். பொறியாளர் நரசிம்மன் ஏற்புரை நிகழ்த்தினார், முடிவில் நித்யா கோபாலன் நன்றி கூறினார்.

Updated On: 20 Nov 2023 6:18 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    Tamil Nadu Rain Today-புயல் எச்சரிக்கை, கனமழையால் சென்னையில்...
  2. வணிகம்
    Day Trading Guide for Stock Market Today-இன்னிக்கு எந்த பங்கினை...
  3. உலகம்
    Malaysia Unveils Visa-Free Entry for Indians- டிசம்பர் 1 முதல் இந்திய...
  4. வழிகாட்டி
    Muyarchi Quotes in Tamil-முயற்சி இருந்தால் ஆமையும் வெல்லும்..!
  5. கல்வி
    Easy Thirukkural for Kids-குட்டீஸ்கள் ஈஸியா நினைவில் வைத்திருக்கும்...
  6. இந்தியா
    New Sim Card Rules in India-நாளை முதல் சிம் கார்டுக்கு புதிய...
  7. உலகம்
    ஒரே பாலின திருமணத்தை முறைப்படி பதிவு செய்து வரலாறு படைத்த நேபாளம்
  8. ஆன்மீகம்
    Palli Palan in Tamil-உங்களுக்கு பல்லி எங்கே விழுந்தது? பலன்...
  9. டாக்டர் சார்
    Loose Motion Meaning in Tamil-வயிற்றுப்போக்கு வந்தால்..என்ன
  10. கடையநல்லூர்
    அரசு வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது..!