திருச்சியில் தனியாக வசித்து வந்த ஆட்டோ டிரைவர் மர்ம சாவு

திருச்சியில் தனியாக வசித்து வந்த ஆட்டோ டிரைவர் மர்ம சாவு
X
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் தனியாக வசித்து வந்த ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்தார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரதிஷா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், பிரதிஷா விவாகரத்து பெற்று கேரளாவிற்கு சென்றுவிட்டார்.

இதனால் சதீஷ்குமார் மட்டும் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் உடல்நலக்குறைவு காரணமாக வாந்தி எடுத்து மயங்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து சதீஷ்குமாரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து சதீஷ்குமாரின் தங்கை சவுமியா கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சதீஷ்குமார் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்