திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் நாளை துவக்கம்

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள  போட்டிகள் நாளை துவக்கம்
X

பைல் படம்.

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை துவங்கி நடைபெற உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தகுதி பெறும் வீரர், வீராங்கனைகள் திருவண்ணாமலையில் 13, 14, 15 மற்றும் 16.10.22 தேதியில் நடைபெறும் மாநில போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தகுதியின் அடிப்படையில் தேசிய போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.

இந்த போட்டிகள் சிறப்புடன் நடைபெறுவதற்கும், அதிக அளவில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அதிக பதக்கங்களை பெற்று நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் மற்றும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்க்க தங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!