திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கைது

திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கைது
X

கைது செய்யப்பட்ட தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கார்த்திக்.

திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 37 ).இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் திருச்சி கன்டோன் பகுதியில் செயல்படும் ஒரு தொழில் நிறுவனத்திற்கும் ஆலோசராக உள்ளார்.

அந்த நிறுவனத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதியன்று திருச்சி மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆய்வு செய்தார். அப்போது அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறி அந்த நிறுவனத்திற்கு எச்சரிக்கை கடிதத்தை உதவி ஆய்வாளர் கார்த்திக் அனுப்பி உள்ளார்.

அதன் பெயரில் ஆலோசகர் மனோகரன் அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது என்று கூறி ஆவணங்களின் நகங்களை தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதை ஏற்காத உதவி ஆய்வாளர் கார்த்திக் தனக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன் இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. மணிகண்டன் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் செய்து கொண்ட ஏற்பாட்டின் படி மனோகரன் இன்று தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் 15000 ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கிய போது கார்த்திக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் கார்த்திக்கின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அதன் பின்னர் கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business