திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைதானவர் மீது குண்டர்  சட்டம் பாய்ந்தது
X
திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைதானவர் மீது போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருச்சி மாநகரில் கடந்த ஜனவரி 17-ந்தேதி செசன்ஸ் கோர்ட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வ.உ.சி சிலை அருகில், ரோட்டில் நடத்து சென்ற ஒருவரிடம் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.500/-பறித்து சென்றதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொழுப்பு பாரதி (எ) பாரதிதாசன் (வயது 23) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் போலீசாரின் விசாரணையில் இந்த வழக்கின் குற்றவாளியான கொழுப்பு பாரதி (எ) பாரதிதாசன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

எனவே, மேற்படி குற்றவாளி கொழுப்பு பாரதி (எ) பாரதிதாசன் என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் ஆணையினை சார்வு செய்து, தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி