திருச்சி காந்திமார்க்கெட் மணிக்கூண்டு அருகே முப்படை தளபதிக்கு அஞ்சலி

திருச்சி காந்திமார்க்கெட் மணிக்கூண்டு அருகே முப்படை தளபதிக்கு அஞ்சலி
X

திருச்சி மணிக்கூண்டு அருகில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்திற்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி காந்திமார்க்கெட் மணிக்கூண்டு அருகே முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு போர் வீரர்கள் நினைவிட சதுக்கத்தில் கடந்த புதன்கிழமை அன்று மறைந்த இந்திய முப்படை பாதுகாப்புத் தலைவர் தளபதி பிபின் ராவத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூத்த சமூக ஆர்வலர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கீழ் அரண் சாலை எஸ் முகமது இப்ராகீம் தலைமையில் திருச்சி மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் திருப்பதி, பொன் குணசீலன், மழபாடி வி ராஜாராம் டவுன் ஸ்டேஷன் முரளி, கே. வெங்கட்ராமன், சிந்தாமணி டி ராஜா, வைர பாஸ்கரன் இரா. கங்காதரன், காட்டூர் என் ராம லெஷ்மி ஆகியோர் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!