மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வான விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு
மாநில மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வான விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் தேசிய மற்றும் மாவட்ட அளவில் தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ள தடகள விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வருகின்ற செப்டம்பர் 22 முதல் 29ந்தேதி வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே நடைபெறவுள்ள தடகள விளையாட்டு போட்டிகளில் திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
17 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் பிரியதர்ஷனி 400 மீட்டர் 800மீட்டர் 1500 மீட்டர் ஒட்டப்பந்தயத்திலும், 14 வயதினருக்கான தடகள விளையாட்டு பிரிவில் 200 மீட்டர், 400மீட்டர், 600 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கீர்த்திகாவும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதுபோன்று ஈரோடு மாவட்டத்தில் தமிழக தடகள விளையாட்டு சங்கம் சார்பில் தமிழக அளவில் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகளில் திருச்சி மாவட்டம் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
20 வயதினருகளுக்கான பிரிவில் ராகுல் ,வெற்றி கெவினும் 18 வயதினர்களுக்கான பிரிவில் கிருபா லட்சுமி,ஷர்லியும் 14 வயதினர்களுக்கான பிரிவில் பர்வேஷ்தர்ஷன், அனுப்பிரியா யோகதர்ஷினி அகல்யாவும் பங்கேற்க உள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த மாதம் நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தேர்வாகியூள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மாற்றம் அமைப்பு மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு திருச்சி கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ் ரயில்வேதுறை அலுவலக கண்காணிப்பாளரும் தேசிய தடகள விளையாட்டு வீரருமான தமிழரசன், தடகள பயிற்சியாளரும் அஞ்சல் துறை ஊழியருமான முனியாண்டி மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் & தின சேவை அறக்கட்டளையின் நிர்வாகி சிவபிரகாசம் கண்ணன், அமிர்தம் அறக்கட்டளை தலைவர் யோகா விஜயகுமார், மண்ணுக்கும் மக்களுக்கும் அமைப்பின் திருச்சி கிளை ஒருங்கிணைப்பாளர் கேசவன், தொழில் அதிபர் சிவகுமார்,மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயிற்சியாளருமான சுரேஷ் பாபு ,மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆறுமுகம், டாக்டர் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி, ரத்தினகுமார் மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவரும், தேசிய மாநில அளவில் விருதுகள் பெற்ற குறும்படத்தின் நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu