திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

திருச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் நேரு வழங்கினார்.
திருச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் நேரு, மஸ்தான் வழங்கினார்கள்.
திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்கள்.
திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்த, குறைந்த பட்சம் 8, 10, ஐடிஐ, டிப்ளமோ, 12, பட்டப்படிப்பு பெற்ற இளைஞர்களுக்கு (ஆண் , பெண் இருபாலரும்) அவரவர்களின் தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் 33க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கு பெற்றது. 176 மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்துக்கொண்டனர். அதில் 53 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கைபேசி 5 நபர்களுக்கும், மூன்று சக்கர வாகனம் 2 நபர்களுக்கும், விலையில்லா மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் 2 நபர்களுக்கும் என மொத்தம் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முன்னதாக, திருச்சிராப்பள்ளி ஹோலி கிராஸ் சர்வீஸ்சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புக் குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர்.மேலும், வீலோசிட்டி என்ற தனியார் நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் பொருட்டு நடமாடும் இ-ஆட்டோ மூலம் கிராமப்புற பகுதிக்கு காய்கறிகளை விற்பனை செய்ய WOWதிட்டத்தினை அறிமுகப்படுத்தி அமைச்சர்கள் நேரு, மஸ்தான் தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்டல இணை இயக்குநர் மு.சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், துணை இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மகாராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், தனியார்தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu