திருச்சியில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் 31 பேருக்கு பணி நியமன ஆணை

திருச்சியில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் 31 பேருக்கு பணி நியமன ஆணை
X

திருச்சியில் காசநோய் ஒழிப்புதிட்ட பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்கள்.

திருச்சியில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் நேரு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி வழங்கினார்கள்.

காச நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய காசநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.

இதில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், துணைமேயர் திவ்யா,மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி