திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியிலும் போலீஸ் அதிகாரிகள் நியமனம்

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியிலும் போலீஸ் அதிகாரிகள் நியமனம்
X

திருச்சி மாவட்டத்தில் உள்ள ௯9சட்டமன்ற தொகுதிகளுக்கும் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கும் பணி கணினி முறையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியிலும் போலீஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் - 2024 முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் பணியாற்றும் காவல்துறை அலுவலலர்களுக்கான கணினி குலுக்கல் முறை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் தேர்தல் பார்வையாளர் (காவல்) அமித் குமார் விஸ்வகர்மா முன்னிலையில் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தல் - 2024 முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான கணினி குலுக்கல் முறை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பிரிவில் இன்று (08.04.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில், தேர்தல் பார்வையாளர் (காவல்) அமித் குமார் விஸ்வகர்மா முன்னிலையில் நடைபெற்றது.

காவல் துறை அலுவலர்களின் கணினி குலுக்கல் முறையில் சட்டமன்ற தொகுதிவாரியாக கீழ்கண்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வ.எண்: சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயார் ஒதுக்கீடு செய்யப்பட்ட காவல் அலுவலர்களின் எண்ணிக்கை பட்டியல் வருமாறு:-

01. 138.மணப்பாறை 187

02. 139.ஸ்ரீரங்கம் 152

03. 140.திருச்சிராப்பள்ளி(மேற்கு) 98

04. 141.திருச்சிராப்பள்ளி(கிழக்கு) 107

05. 142.திருவெறும்பூர் 118

06. 143.இலால்குடி 128

07. 144.மணச்சநல்லூர். 143

08. 145.முசிறி 149

09. 146.துறையூர்(தனி) 145

கூடுதல் 1227

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு