திருச்சி வேளாண் வணிகத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருச்சி வேளாண் வணிகத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
X
திருச்சி வேளாண் வணிகத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரூ.10 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருச்சி வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பத்து லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மதுரை ரோடு பாலக்கரை பகுதியில் உள்ளது திருச்சி வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை அலுவலகம். இதனை மார்க்கெட்டிங் கமிட்டி ஆபீஸ் என பேச்சுவழக்கில் கூறுவார்கள். இந்த அலுவலகத்தில் வேளாண் பொருட்கள் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான நடவடிக்கைகள் நடத்தப்படுவதுண்டு. இந்த அலுவலகத்தில் செயலாளராக இருப்பவர் சுரேஷ்பாபு. இந்த அலுவலகத்தில் தீபாவளி பரிசு பொருள் என்ற பெயரில் லஞ்சம் புறப்படுவதாக திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர்ராணி மற்றும் போலீஸ் படையினர் இன்று அதிரடியாக அலுவலகத்திற்கு நுழைந்தனர். உள்ளே நுழைந்ததும் அலுவலகத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு ஊழியர்களை வெளியே செல்ல விடாமல் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுடைய உடமைகள் மற்றும் மேஜைகள் சோதனை இடப்பட்டன.

இந்த சோதனையின் போது கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செயலாளர் சுரேஷ்பாபுவின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இரண்டு இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பணத்திற்கு சரியாக கணக்கு காட்டவில்லை என்றால் அது லஞ்சப் பணமாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !