திருச்சியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

திருச்சியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.

திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையம் மற்றும் மெயின்கார்டு கேட் துணை மின் நிலையம் ஆகியவற்றில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் துணை மின் நிலைய தொடரமைப்பு சுற்றில் பழுது நீக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரி தெரு, சத்திரம் பேருந்து நிலையம், கல்லூரி சாலை ஆகிய இடங்கள்.

சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணபட்டறை தெரு, சிங்காரத்தோப்பு, சாலை ரோடு, வாத்துக்கார தெரு, முதலியார் தெரு, உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைகொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, T.T.ரோடு, சோழராஜபுரம், V.S.கோயில், கந்தன் தெரு, சின்னப்பன் தெரு, லிங்க நகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள் நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரி மங்கலம், கம்பரசம்பேட்டை, காவேரி நகர் ஆகிய பகுதிகள்.

முருங்கப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பலூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர் வெல் பொன்மலை, HSPP முதலிய குடிநீரேற்று நிலையங்கள், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார் பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லக்கொடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி மாநகர் மாவட்ட மின்தடை புகார் மற்றும் மின் தடை சம்பந்தமான தகவல்களுக்கு 1912 மற்றும் 18004252912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!