நாளை அண்ணா பிறந்த நாள்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்

நாளை அண்ணா பிறந்த நாள்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்
X

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ப.குமார்.

நாளை அண்ணா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நாளை கழகம் சார்பில் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கிளை கழக நிர்வாகிகள், இளைஞர் அணி மற்றும் பேரவை ,பாசறை, வர்த்தக அணி, இலக்கிய அணி, மகளிர் அணி ,சிறுபான்மையினர் நலப்பிரிவு , வழக்கறிஞர் பிரிவு,அண்ணா தொழிற்சங்கம் உள்பட அனைத்து அணி நிர்வாகிகள், கழக செயல் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் இதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture