அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வேண்டுகோள்

அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
X

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி.

நாளை அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 53 வது நினைவு தினமான (3.2.2022- வியாழக்கிழமை) அன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு அல்லது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதுசமயம் அந்தந்த பகுதிகளில் உள்ள தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!