கொள்ளிடம் ஆற்றில் அன்பில், உத்தமர் கோவில் பெருமாள் சுவாமிகள் தரிசனம்

கொள்ளிடம் ஆற்றில் அன்பில், உத்தமர் கோவில் பெருமாள் சுவாமிகள் தரிசனம்
X

கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய பெருமாள்.

கொள்ளிடம் ஆற்றில் அன்பில், உத்தமர் கோவில் பெருமாள் சுவாமிகள் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர்.

இன்று மாசி மகத்தையொட்டி சைவம் மற்றும் வைணவ தலங்களில் சிவன் பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்புஅபிசேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த ஆலயங்களில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா மற்றும் தீர்த்தவாரிகளும் கண்டருளினர்.


அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில்மாசி மகத்தை முன்னிட்டு அன்பில் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் நம்பெருமாள் திருவாபரணம் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதே போல் உத்தமர் கோவில் ஸ்ரீபுருஷோத்த பெருமாள் பக்தர்களுக்கு சிறப்பு சேவை சாதித்தார்.

ஒரே இடத்தில் எழுந்தருளிய பெருமாள் சுவாமிகளை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!