திருச்சியில் அன்பில் பொய்யாமொழியின் 23-வது நினைவு தின நிகழ்ச்சி

திருச்சியில் அன்பில் பொய்யாமொழியின் 23-வது நினைவு தின நிகழ்ச்சி
X

திருச்சியில் அன்பில் பொய்யாமொழி உருவ படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருச்சியில் அன்பில் பொய்யாமொழியின் 23-வது நினைவு தின நிகழ்ச்சி இன்று அனுசரிக்கப்பட்டது.

தி.மு.க. முன்னாள் இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 23ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று திருச்சியில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அன்பில் அறக்கட்டளையிலிருந்து ரூ.3.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மண்டல குழு தலைவர் மதிவாணன், பகுதி கழகச் செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் , தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
ai in future agriculture