திருச்சி ஜேகேநகரில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் பாதாள சாக்கடை மேன்ஹோல்

திருச்சி ஜேகேநகரில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் பாதாள சாக்கடை மேன்ஹோல்
X

திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி.

திருச்சி ஜேகேநகரில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் பாதாள சாக்கடை மேன்ஹோலை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி ஜேகேநகர் விரிவாக்க பகுதியில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் பாதாள சாக்கடை திறப்பானை மூடவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சி நான்காவது மண்டலம் 61 வது வார்டில் உள்ளது ஜேகே நகர். ஜேகே நகர் விரிவாக்க பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள லூர்து நகர், ஆர் வி எஸ் நகர், ஆர் எஸ் புரம் ,திருமுருகன் நகர், முகமது நகர் போன்ற பகுதிகளில் எல்லாம் பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதற்கான திட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆனால் வீடுகளுக்கு மட்டும் இன்னும் இணைப்பு கொடுக்கப்படவில்லை.


பாதாள சாக்கடை மெயின் குழாய்கள் மற்றும் இணைப்பு குழாய்கள் எல்லாம் பொருத்தப்பட்டு விட்டன. இந்த நிலையில் ஜேகே நகர் விரிவாக்க பகுதி கங்கை தெருவில் சாலையின் நடுவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் ஒன்று உள்ளது. இந்த மேன் ஹோலில் உள்ள மூடி பணிகள் நடக்கும் போது திறந்து உள்ளது. பின்னர் அதனை மூடவில்லை. அப்படியே விட்டு விட்டார்கள். இதன் காரணமாக சாலையின் நடுவில் மேன்ஹோல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் தெருவில் விளையாடும் குழந்தைகள் அல்லது வயதான முதியவர்கள் எந்த நேரத்திலும் அதில் விழுந்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதனால் இந்த மேன்ஹோலை மூட வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த மேன்ஹோலை மோடி உயிர்பலி வாங்கும் விபத்தில் இருந்து மக்களை காப்பாற்றுமாறு ஜேகே நகர் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்