திருச்சியில் நடந்தது புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் நடந்தது புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு பேரணி
X

திருச்சி புத்தக திருவிழாவையொட்டி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சியில் புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் வருகிற 16 ம்தேதி முதல் 26ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா பற்றிய விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய பஸ்நிலையம் பெரியார் சிலை அருகில் இந்த பேரணியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி மண்டலகுழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai for business microsoft