திருச்சி பொன்மலையில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி பதாகை ஏந்தி நின்ற விளையாட்டு வீரர்கள்.
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.
18வது பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தியாவில் இதுவரை 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது இல்லை. அதிக பட்சமாக 80 முதல் 85 சதவீத வாக்காளர்கள் தான் வாக்களித்து வருகிறார்கள்.
எனவே 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம், பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம் என மக்கள் சக்தி இயக்கம் சார்ல் பிரசாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியான திருச்சி பொன்மலை ரெயில்வே மைதானத்தில் நடைப்பெற்றது .
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக எனது வாக்கு விற்பனைக்கு இல்லை, நான் தவறாமல் வாக்களிப்பேன், உறுதி மொழி எடுக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ. பொன்மலை சாமி தற்காப்பு கலைக்கூடம் பயிற்சியாளர் துரை.ஜீவானந்தம், மே.க.கோட்டை தினேஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
வாக்களிக்கும் கடமையை ஆற்றுவோம், பணத்துக்கு வாக்களிக்கும் மடைமையினை மாற்றுவோம் என்ற பதாகைகளை விளையாட்டு வீரர்கள் ஏந்தி விழிப்புணர்வு செய்ததுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் பொன்மலை மலையடிவாரம்,பொன்மலை சந்தை பகுதிகளில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வீட்டின் கதவுகள், இருசக்கர வாகனங்கள். கார்களில் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்க மாவட்ட நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu