திருச்சியில் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு

திருச்சியில் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
X
திருச்சியில் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி புத்தூர் வயலூர் ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் குமரய்யா (வயது 34). அதே பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியில் உள்ளார். கடந்த 4-ஆம் தேதி தீபாவளி அன்று ஆம்புலன்ஸ்சை முதியோர் இல்லத்தின்முன்பாக நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள்வந்து பார்த்த போது ஆம்புலன்ஸ் சைடு கண்ணாடிஉடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அரசு மருத்துவமனை போலீசில் கும்ரய்யா புகார் கொடுத்தார். அரசு மருத்துவமனை சப்-இன்ஸ்பெக்டர்மதியழகன் வழக்கு பதிந்து முதியோர் இல்லத்தில்உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவை ஆய்வு செய்த போது, அதே பகுதியை சேர்ந்த மாரி மற்றும் ராஜேஷ் இருவரும் கல்லால் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!