திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி

திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்படுதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
X

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் சவுடு மணல் அள்ள அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் , சவுடு மண் , களிமண் போன்ற சிறுவகைக் கனிமங்களை விவசாயிகள் தங்கள் வயல்களில் பயன்படுத்தவும், பொதுமக்களின் சொந்தப் பயன்பாட்டிற்கும், மண்பாண்டத் தொழில் செய்வோர் பயனடைய அனுமதி வழங்குதல் தொடர்பான விண்ணப்பம் கோரும் அறிவிக்கை திருச்சிராப்பள்ளி, மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

அரசாணை நிலை எண்.50 தொழில் (எம்எம்சி.1) துறை நாள். 27.04.2017, மற்றும் அரசாணை (பலவகை) எண் 314 தொழில் (எம்எம்சி-1) துறை நாள் 25.11.2021-ன்படியும் தமிழ்நாடு சிறுகனிமச் சலுகை விதிகள் 1959 விதி எண் 12(2)-ன்படியும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் 73 குளங்களுக்கும், பொதுப்பணித்துறை அரியாறு கோட்டத்தின் 89 குளங்களுக்கும் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் 132 குளங்களுக்கும் ஆக கூடுதல் 294 ஏரி ,குளங்களிலிருந்து வண்டல் மண் , சவுடு மண் , களிமண் இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவரால் வரவேற்கப்படுகிறது.

அதன்படி, 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 30-ன்கீழ் பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள், பொது மக்கள் சொந்த தேவைக்கு மற்றும் விவசாயிகளின் விவசாய தேவைக்கு களிமண் , வண்டல் மண் , சவுடு மற்றும் கிராவல் (சொந்த பயன்பாட்டிற்கு மட்டும்) ஆகியவற்றை தூர் வாரும் நோக்கில் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள ஏரி, குளம் மற்றும் குட்டை ஆகிய பகுதிகளிலிருந்து விவசாய தேவைக்கு வண்டல் மண் , களி மண் நன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர்) 1 ஹெக்டேருக்கு 185 கனமீட்டர் புன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர்) 1 ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் மற்றும் இதர சொந்த பயன்பாட்டிற்கு கிராவல் ஆகியவை 30 கனமீட்டர்(10 டிராக்டர்) மற்றும் மண் பாண்டங்கள் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர்) ஆகியவை கட்டணமின்றி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று எடுத்து செல்ல 20 நாட்களுக்கு மிகாமல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்.

விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது அவரது விவசாய நிலம் அதே வருவாய் கிராமங்களில் அமைந்திருக்க வேண்டும், சிட்டா மற்றும் அடங்கல் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும், மண்பாண்டங்கள் செய்வதற்கான களி மண் எடுக்க சம்பந்தப்பட்ட மண்பாண்டத் தொழிலாளர் சங்கம் அல்லது கிராம நிர்வாக அதிகாரியின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும், விவசாயிகள் ,பயனாளிகள் , விவசாய கூட்டமைப்புகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் ஏரி,குளம் ,குட்டைகளில் உள்ள கனிமத்தினை பகுப்பாய்வு செய்து மண்பரிசோதனை அறிக்கையை பெற வேண்டும், அனுமதி பெற்ற பயனாளிகள் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரிடம் ஒப்பந்த பத்திரம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 March 2023 3:41 PM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...