திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அகில இந்திய செஸ் போட்டி
திருச்சியில் நடந்த அகில இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆல் இந்தியா ஓபன் செஸ் சாம்பியன் ஷிப்- 2022 போட்டிகள் வயலூர் சாலை ராமலிங்கா நகரில் உள்ள ஸ்பாடிக்ஸ் சொசைட்டி கூட்டரங்கில் நடைபெற்றது. இப்பபோட்டியில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஸ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி, உள்ளிட்ட 9 மாநிலங்களில் இருந்து 29 சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் இரண்டாம் நாள் போட்டிகளில் விளையாடும் சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும், நடிகருமான ஆர். ஏ. தாமஸ் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இரு தினங்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி இறுதி போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காந்தி மெர்ரி, 2ம் இடத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷிகாந்த்,3ம் இடத்தை தமிழகத்தை சேர்ந்த வி. கண்ணன், 4 ம் இடத்தை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கட கிருஷ்ணன் உள்ளிட்டோர் பிடித்தனர்.
இவர்கள் வருகின்ற பாரா ஏசியன் போட்டிகளில் விளையாட உள்ளனர். திருச்சியில் நடைபெற்ற இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செஸ் பெடரேஷன் ஆப் பிஸிக்களி டிஸ்ஏப்ள்டு அமைப்பின் நிர்வாகிகள் தலைவர் எஸ். சகாய ராஜ் செயலாளர், ஜீ. காணிக்கை இருதய ராஜ், பொருளாளர் எம். பாஸ்கர், துணை தலைவர்கள் ஜகதீஷ் ராவ் ,சுரேஷ் அகர்வால் யேசுபாபு, இணை செயலாளர்கள் சேக்நசீர்,சத்தியமூர்த்தி, ஜான் ஏஞ்சல்,பிரசாத் தாஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu