திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்களின் வேலையை பறிக்கக் கூடாது, ஊதியத்தை பறிக்கக்கூடாது, பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், தூய்மை பணியாளர்களின் பணி ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் கடைநிலை ஊழியருக்கான ஊதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் மார்ச் இரண்டாம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி ஏ.ஐ.டி.யு. சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட உள்ளாட்சி ஏ.ஐ.டி.யு.சி தலைவர் இந்திரஜித், ஏ.ஐ.டி.யு.சி திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் நடராஜா, மாவட்ட பொருளாளர் ராமராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.ஐ. மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார்,சிவா, மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துச்சாமி, நிர்வாகிகள் வெங்கராமலு, ஜனசக்தி உசேன்,, முருகன், சப்தரிஷி சந்திர பிரகாஷ், வீரன், மகாமுனி, காமாட்சி, குணசிங், அருள்ராஜ், பொம்மியம்மாள், நதியா, உதயகுமார் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu