திருச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்க சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம்

திருச்சியில் ஏஐடியுசி  தொழிற்சங்க சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம்
X
திருச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்க சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
திருச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்க சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஏஐடியூசி மாநில சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் இன்று மே 10 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. கரூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுகம் செயலாளர் அறிக்கை வைத்து பேசினார்.தமிழ்நாடு ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் சங்கத்தின் நிலை, தொழிலாளர்கள் நிலை குறித்து சிறப்புரையாற்றினார்,ஏஐடியூசி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் க சுரேஷ், மாவட்ட தலைவர் வே. நடராஜா வாழ்த்துரை வழங்கினர்.

சம்மேளன பொருளாளர் க.நேருதுரை, துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணியன்,நந்தாசிங், கே. எம். செல்வராஜ், துணை தலைவர்கள் துரை. மதிவாணன், நாகை கோபிநாதன், காரை.சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் . காலாவதியான பழைய பேருந்துகளை மாற்றிட வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 103 மாதம் நிலுவையுடன் வழங்க வேண்டும்.

சமூக விரோதிகளால் தாக்கப்படும் ஓட்டுனர், நடத்துனர்கள் மரணம் ஏற்பட்டால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும், 20 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்க வேண்டும்.

ஓட்டுனர் நடத்துனர்கள் பற்றாக்குறையால் முழுமையாக பேருந்துகளை இயக்க முடியாத நிலை உள்ளது, தேவையான தொழிலாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்வைத்து தொழிலாளர் மத்தியில் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது இறுதியாக திருச்சி மண்டல தலைவர் டிவி. செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!