ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டம்

ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளர் சங்க மாநில குழு  கூட்டம்
X

ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளர் இணையத்தின் மாநில குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. 

ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தெரு வியாபாரிகள் சட்டம் மற்றும் விதிகளை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தெரு வியாபார தொழிலாளர்கள் சார்பில் பிப்ரவரி 6 ம்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளர் இணையத்தின் மாநில குழு கூட்டம் திருச்சி ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சி. சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. தேசிய செயலாளர் டி. எம். மூர்த்தி மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட பொதுசெயலாளர் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ், தெரு வியாபாரிகள் சங்கத் தலைவர் திருச்சி எஸ்.சிவா, பொதுச் செயலாளர்ஏ.அன்சர்தீன் கடலூர் வடிவேல் புதுக்கோட்டை டி ஆர் ரங்கையா,நாடிமுத்து, ஓசூர் யு.சின்னசாமி,முபாரக் திருவாரூர் கே. புலிகேசி, எம். ராஜா கோயம்புத்தூர் ஜி சம்பத், தூத்துக்குடி ஜோசப், திருப்பூர் ஜி.ரவி, திருப்பரங்குன்றம் மாரி மண்ணச்சநல்லூர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் தெரு வியாபார சட்டம் அமல்படுத்துவதற்கான திட்டம் மற்றும் விதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை தெரு வியாபாரிகளுக்கான சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே மாநிலம் முழுவதும் அந்தந்த உள்ளாட்சிக்கு உட்பட்ட இடங்களில் தெரு வியாபாரம் செய்கின்ற தெரு வியாபாரிகளை உடனடியாக கணக்கெடுத்து அவர்களுக்கு வியாபார சான்று ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும், முறையாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வணிக குழு தேர்தல் நடத்த வேண்டும், வணிகக் குழுவிற்கு உள்ளாட்சி அலுவலகங்களில் அலுவலக அறை ஒதுக்கவும் பணியாளர் நியமிக்கப்பட வேண்டும், பெரும்பாலான பேரூராட்சிகள் கிராம ஊராட்சிகளில் வியாபாரம் செய்கின்ற தெரு வியாபாரிகளை இதுவரை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்காத நிலையில் இந்த பணியை தமிழ்நாடு அரசு உடனடியாக துவக்க வேண்டும்.

வணிக கட்டணம் அந்த சட்ட விதிகளில் இடம்பெற்றுள்ள தொகையை நேரடியாக வசூலிக்க வேண்டும், டெண்டர் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுதும் பிப்ரவரி 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர் மூலமாக முதலமைச்சருக்கு கோரிக்கை விண்ணப்பம் அனுப்புவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கிராம ஊராட்சி பேரூராட்சிகளில் தெரு வியாபார சட்டம் மற்றும் விதிகளை அமுல்படுத்தக் கோரி மாநிலம் முழுதும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் கோரிக்கை விண்ணப்பம் அளித்து அமுல்படுத்த வற்புறுத்த முடிவு செய்யப்பட்டது. சங்கத்தின் மாநில மாநாட்டை ஜூலையில் நடத்துவது என்றும் அதற்கு முன்னதாக மாவட்ட மாநாடுகளை நடத்தி மாவட்ட அமைப்புகளை ஏற்படுத்துவது மாவட்ட அளவில் சங்கங்களை பதிவு செய்வது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மாநில பொதுச் செயலாளராக வி. குளோப் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags

Next Story