திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு

திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு
X

திருச்சியில்  ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Construction Workers Welfare Board - திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டி தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் துவங்கியது.

Construction Workers Welfare Board -தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி.கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி உறையூர் கைத்தறி நெசவாளர் திருமண மண்டபத்தில் 2022 ஆகஸ்ட் 16 ,17ல் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 16ல்துவங்கியகூட்டத்தில் சங்கத்தின்மாநிலத் துணைத் தலைவரும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளருமான டி.எம். மூர்த்தி தலைமை உரையாற்றினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. ரவி அறிக்கை தாக்கல் செய்தார். துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் மாநில துணைத்தலைவர்கள் திருச்சி க. சுரேஷ், பாலகிருஷ்ணன், கவிதா முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாவட்ட செயலாளர் செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். இரண்டு நாட்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்டுமான பெண் தொழிலாளர் பிரிவை சார்ந்து இருக்கிற பொறுப்பாளர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story