தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க திருச்சி மாவட்ட கூட்டம்

திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுரேஷ் பேசினார்.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட குழு கூட்டம் பெரிய மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி. செல்வகுமார் மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஆர்.முருகன் மாவட்ட துணைத் தலைவர்கள் மருதம்பாள், துரைராஜ் மற்றும் மருங்காபுரி தேனூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், லால்குடி இருதயசாமி, வையம்பட்டி இனம்புதூர் பழனியப்பன், திருச்சி மாநகர் நாகராஜ், மணிகண்டம் ஒன்றியம் ஜோதிநகர் முத்தழகு நாடார்தெரு பெண்கள் சங்க மாநிலக்குழு நிர்மலா, அல்லித்துறை ரஷியாபேகம், கீழவயலூர் சசிகலா மகாநதி புதுத்தெரு ஹேமலதா, இனாம்குளத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் கலைச்செல்வன் கொடாப்பு பிரகாஷ் குமரேசன் பள்ளப்பட்டி ரெங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கட்டுமான மற்றும் அமைப்பு சாரா பெண் தொழிலாளர்கள் பேறுகால உதவியாக 6 மாத விடுப்பு, ரூ. 90 ஆயிரம் வழங்க வேண்டும்,கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் வாரிய நிதி உதவியை கூடுதல் படுத்த வேண்டும், 28.29 தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் விளக்க பிரச்சாரக் கூட்டம் உறையூர் குறத்தெருவில் 19.3.2022 அன்று மற்றும் 21.3.2022 அன்று மாலை சோமரசம்பேட்டையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வது.
28.3.2022 அன்று நடைபெறும் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் திருச்சி மாநகர பகுதியில் உள்ள அனைத்து தோழர்களும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கலந்து கொள்வது.
சோமரசம்பேட்டை நாச்சிகுறிச்சி அல்லித்துறை அதவத்தூர் ஆகிய பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 128 தொழிலாளர்கள் இலவச வீட்டுமனை சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது மாநில தலைவர்களை அழைத்து பெருந்திரல் போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூட்ட முடிவில் துணைத் தலைவர் மருதம்பாள் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu