பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் ஆட்டோ, மோட்டார் வாகனங்களுக்கு எப்.சி மற்றும் லைசன்ஸ் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியதை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி திருச்சி மாநகர் உறையூர் குறதெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் துரைராஜ் தலைமை ஏற்றார். ரமேஷ், வெங்கடேசன், பாலசுப்பிரமணி, கௌரிசங்கர், பாலகிருஷ்ணன், நீதிபதி, செந்தில் முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் க. சுரேஷ், தலைவர் நடராஜா ஆட்டோ சங்க மாநகரத்தலைவர் சத்யா, வங்கி யூனியன் நாராயணசாமி, மாணவர் பெருமன்றம் இப்ராகிம், சட்ட ஆலோசகர் செல்வகுமார், எரிவாயு உருளை தொழிற்சங்க கௌரவ தலைவர் சுரேஷ் முத்துசாமி, செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினார்.

50 க்கும்மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கோஷமிட்டு பங்கேற்றனர். ஆட்டோ பக்கிரிசாமி நன்றி கூறினார்.

Tags

Next Story