திருச்சியில் இருந்து அக்டோபர் முதல் வியட்நாம் நாட்டிற்கு விமான சேவை
திருச்சி விமான நிலையம் (கோப்பு படம்).
திருச்சி சர்வதேச விமான நிலையம் மாநிலத்தில் மத்தியில் அமைந்துள்ளதால் எந்த பகுதியில் இருந்தும் வெளிநாடு செல்வோர் மற்றும் திரும்புவோர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டு தோறும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வழியாக வந்துசெல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. பயணிகளை கையாள்வதில் திருச்சி விமானநிலையம் 11-வது இடத்தில் உள்ளது.
தற்போது ரூ.951 கோடியில் மொத்தம் 60.723 சதுர மீட்டரில் புதிய முனையம் அமைக்கப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன.
இது குறித் திருச்சி விமானநிலைய அதிகாரி ஒருவர் கூறும் போது, கடந்த 2022-23-ம் நிதியாண்டில் திருச்சி விானநிலையம் ரூ.31.51 கோடி லாபம் ஈட்டியுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சேவையாக சிங்கப்பூருக்கு 4, மலேசியாவுக்கு 3, கொழும்பு, சார்ஜா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தலா 1 என 10 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தற்போது வாரத்துக்கு 76 வெளிநாட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வருகிற அக்டோபர் மாதம் 29-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள குளிர்கால அட்டவணைப்படி, வாரத்துக்கு மேலும் 31 வெளிநாட்டு விமான சேவைகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, திருச்சி விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி சேவை 3 லிருந்து 5 ஆகவும், சிகங்கப்பூருக்கு 4 லிருந்து 5 ஆகவும், இலங்கைக்கு 1லிருந்து 2 ஆகவும், வியட்நாமுக்கு வாரத்துக்கு புதிதாக 3-ம் என வாரத்துக்கு 31 விமான சேவைகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் திருச்சி விமானநிலையத்தில் இருந்து வழங்கப்படும் வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu