திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் கொரோனாவை விட எய்ட்ஸ் ஒன்றும் பெரிய தொற்று நோய் இல்லை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்க கூடாது. அவர்களும் சமுதாயத்தில் ஒரு அங்கம் தான் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட சார்பு நீதிபதி நசீர் அலி, சுகாதார துறை இணை இயக்குனர் லெட்சுமி,திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் மணிவண்ணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu