அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சியில் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பு கலை மூலம் எச்.ஐ.வி. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் வரவேற்றார்.துணைத் தலைவர் காசிநாத், பொருளாளர் மகாராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் அஞ்சல் தலை சேகரிப்பு கலை மூலம் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து பேசினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:-
கடித தகவல் பரிமாற்றத்தில் அனுப்புனர் பெறுனருக்கு கடிதம் எழுதி அனுப்ப ஒட்டப்படும் விலை பொருந்திய காகித வில்லை தான் அஞ்சல் தலை. அஞ்சல் தலைகள் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலைகள், குறுவடிவ அஞ்சல் தலைகள் பல்வேறு நிகழ்வுகளுக்கான அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள் ஆகியவற்றை இந்திய அஞ்சல் துறையினரால் வெளியிடுகின்றனர்.
அவ்வகையில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நினைவார்த்த அஞ்சல் உறைகள், நினைவார்த்த தபால் தலைகள், மெகதூத் அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். உலக எய்ட்ஸ் தினம் , 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது, எச்.ஐ.வி தொற்று பரவுவதால் ஏற்படும் எய்ட்ஸ் தொற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , நோயால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் சுகாதார அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த கல்வியுடன் இந் நாளைக் கடைப்பிடிக்கின்றனர். அவ்வகையில் இந்திய அஞ்சல் துறையினரால் வெளியிடப்பட்ட பொது பயன்பாட்டு அஞ்சல் தலைகள், நினைவார்த்த அஞ்சல் தலைகள், குறுவடிவ அஞ்சல் தலைகள், இரு நாடுகள் கூட்டு முயற்சியில் வெளியிட்ட அஞ்சல்தலைகள், அஞ்சல் அட்டைகள், மெகதூத் அஞ்சல் அட்டைகள், விமான அஞ்சல்கள், அஞ்சல் முத்திரைகள்,அஞ்சல் முத்திரைகள், நினைவார்த்த அஞ்சல் உறைகள், முதல் நாள் அஞ்சல் உறைகள், முதல் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு உறைகள் உள்ளிட்ட அஞ்சல் பொருட்களை சேகரித்து பொழுதுபோக்குடன் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் திருச்சியில் அஞ்சல் தலை சேகரிப்பு கலை மூலம் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ஜலால், முஹம்மது சுபேர், குத்புதீன், உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிறைவாக இணைச்செயலாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu