திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் நாளை மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி

திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் நாளை மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி
X

மாவட்ட செயலாளர் ப.குமார்.

திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் நாளை மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தப்படுகிறது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நாளை 25ம் தேதி காலை 11.30 மணிக்கு தமிழ் மொழிக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி பேரூர், ஊராட்சி கிளை கழக மற்றும் மாணவர் அணி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல் வீரர், வீராங்கனைகள் உள்பட அனைத்து அணியினரும் பங்கேற்குமாறு மாவட்ட செயலாளர் ப .குமார் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!