திருச்சியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு: மாவட்ட செயலாளர் அறிக்கை

திருச்சியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு: மாவட்ட செயலாளர் அறிக்கை
X

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி நடராஜன்.

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் பற்றி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு பல்வேறு வரலாற்று சிறப்புகளைப் படைத்திட்ட "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" வருகின்ற 17.10.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்விழா காண இருக்கும் நிலையில் கழகத்தின் பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முன்னாள் தமிழக முதல்வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, முன்னாள் தமிழக துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க,

திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான .ஆர்.வைத்திலிங்கத்தின் வழிகாட்டுதளின் படி திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் சார்பாக திருச்சி கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.ரின் உருவ சிலைக்கு 17.10.2021 அன்று காலை 10.00 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

அதுசமயம் அ.தி.மு.க நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ. பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள். தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு, முன்னாள்கோட்டத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் ஆங்காங்கே உள்ள பகுதி கழகம், வட்ட கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைக்கு அல்லது படங்களுக்கு மாலை அணிவித்தும், கொடி கம்பங்களுக்கு வர்ணம் பூசி, கழக கொடியினை ஏற்றி ஏழை எளியவர்களுக்கு நலதிட்ட உதவிகள் செய்தும்,

அரசு அறிவித்திருக்கும் வழிநெறிமுறைகளை கடைபிடித்தும், சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தும் இன்னும் சில தற்காப்பு நடைவடிக்கைகளை பின்பற்றியும் சிறப்பாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture