திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்ட ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரும் 17-ந்தேதி பொன்விழா ஆண்டு கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமை தாங்கினார்.
அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணை செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன்,
மாவட்ட அணி செயலாளர்கள் எம்.ஜி.ஆர். மன்றம் ராஜ்குமார், ஜெ.பேரவை பத்மநாதன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி முத்துக்குமார், மாணவரணி கார்த்திகேயன், தொழிற்சங்கம் ராஜேந்திரன், சிறுபான்மை நலப்பிரிவு மீரான், மீனவர் பிரிவு அப்பாஸ், இலக்கிய அணி கவிஞர் பழனிச்சாமி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நடராஜன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இலியாஸ்,
பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, ஏர்போர்ட் விஜி, என்.எஸ். பூபதி, கலைவாணன் பொதுக்குழு உறுப்பினர்கள் மல்லிகா செல்வராஜ், வெல்லமண்டி யு. பெருமாள்,
மாநில பிடி தீப்பெட்டி பிரிவு செயலாளர் சகாபுதீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தாயார் ஸ்ரீனிவாசன், வெல்லமண்டி என். ஜவஹர்லால் நேரு மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், மகளிரணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu