திருச்சி 13-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி வாக்கு சேகரிப்பு

திருச்சி 13-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி வாக்கு சேகரிப்பு
X

திருச்சி மாநகராட்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் ஜி. கிருஷ்ணவேணி போட்டியிடுகிறார்.

திருச்சி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய இவர் இன்று காலை வெனீஸ் தெரு பகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார். அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


வெனீஸ் தெருவில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்க தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யும்படி கிருஷ்ணவேணி பெண்களிடம் கேட்டுக்கொண்டார்.

வேட்பாளருடன் அந்த பகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது கணவர் வக்கீல் தாமரை செல்வன் ஆகியோர் சென்றிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future