முன்னாள் கவுன்சிலரிடம் வாழ்த்து பெற்றார் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி

முன்னாள் கவுன்சிலரிடம் வாழ்த்து பெற்றார் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி
X

முன்னாள் கவுன்சிலர் அய்யப்பனிடம் வாழ்த்து பெற்றார் வேட்பாளர் கிருஷ்ணவேணி.

முன்னாள் கவுன்சிலர் அய்யப்பனிடம் வாழ்த்து பெற்றார் திருச்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி.

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் ஜி கிருஷ்ணவேணி போட்டியிடுகிறார். தனது வார்டு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார் கிருஷ்ணவேணி.

மலைக்கோட்டை பகுதியில் வாக்கு சேகரித்த அவர் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான அய்யப்பன் மற்றும் அவரது துனைவியார் ஆகியோரிடம் ஆசி பெற்றார்.


அப்போது அவருடன் மலைகோட்டைஜெகதீசன், 11-வது வட்ட கழக செயலாளர் பாபுஜி மருதை 10-வது வட்ட நிர்வாகிகளான சுந்தர் சேகர், ஸ்ரீதர், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் தாமரைச்செல்வன் உள்பட நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!