திருச்சி கருமண்டபத்தை கலக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு
அ.தி.மு.க. வேட்பாளர் ஜோசப் ஜெரால்டிற்கு ஒரு பெண் ஆரத்தி எடுத்தார்.
திருச்சி மாநகராட்சி 55வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.ஜோசப் ஜெரால்டு போட்டியிடுகிறார். அ.தி.மு.க. திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளராக பதவி வகித்து வரும் ஜோசப் ஜெரால்டிற்கு இது நான்காவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களமாகும். ஏற்கனவே 3 முறை இதே வார்டில் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றிய ஜெரால்டு தான் செய்த பணிகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
அத்துடன் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்கள், கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற திட்டப்பணிகளையும் சாதனைகளாக எடுத்துக்கூறி கருமண்டபத்தை கலக்குகிறார் ஜோசப் ஜெரால்டு.
அவருடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்கிறார்கள். தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu