பயிர் காப்பீடு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு விவசாய சங்கம் கோரிக்கை
திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவி் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமாின் பயிா் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய 2023,நவம்பா் 15.ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. சாகுபடி காலத்தில் தண்ணீா் கிடைக்காமல் போனது மற்றும் இ சேவை மையங்களில் உாிய இணைப்பு கிடைப்பதில் காலதாமதம்,மின் தடை உள்ளிட்ட காரணங்களால் நவம்பா் 15−க்குள் பெரும்பாலன விவசாயிகளால் பயிா் காப்பீடு செய்ய முடியாமல் போனதால் நவம்பா் 30−வரை விவசாயிகள் கால நீடிப்பு கேட்டதில் தமிழக அரசின் பாிந்துரையை ஏற்று மத்திய அரசு நவம்பா் 22−வரை கால நீடிப்பு வழங்கியது.
நவம்பா் 22.வரை பல ஆயிரகணக்கான விவசாயிகள் பயிா் காப்பீடு செய்துள்ளனா்.திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை காலத்தில் தண்ணீா் கிடைக்காமல் போனதால் பெரும்பாலான விவசாயிகளால் சாகுபடி பணிகளை தொடர முடியவில்லை. தொடங்கப்பட்ட பல இடங்களில் நாற்றங்கால்கள் காயந்து போயின. பயிா் காப்பீடு செய்த விவசாயிகள் பிரதமாின்"பயிா் காப்பீடு திட்டத்தில் தடுக்கப்பட்ட விதைப்புக்கான இழப்பீடின் கீழ் பயிா் இழப்பீடு கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ள நேரத்தில் ,திருச்சி மாவட்டத்தில் பயிா் காப்பீடு திட்டத்தில் அனுமதி பெற்று காப்பீடு தொகை பெற்றுள்ள இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனம் 2023, நவம்பா் 15−வரை காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கமுடியும் நவம்பா்15,க்குபின் 22,வரை காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இயலாது என கூறி வருவதாக தொியவருகிறது.
இதனால் பெரும் இழப்புகளுக்குள்ளான விவசாயிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனா். எனவே தாங்கள் திருச்சி மாவட்டத்தில் நவம்பா் 22−வரை பயிா் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடுதொகை கிடைக்க உாிய நடவடிக்கை எடுக்க வேன்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu