தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் வேளாண் விளை பொருட்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா;ச்சித் திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட 80 கிராமங்களில் தோட்டக்கலை துறை மூலம் உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு எக்டேர் ஒன்றிற்கு 75 சதவீத மானியத்தில் ரூ.7500 மதிப்பிலான காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்களும், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த ரூ.200- மதிப்பில் மா, கொய்யா, பலா, எலுமிச்சை மற்றும் சீத்தா போன்ற 5 வகை கொண்ட பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்தில் ஆதார் அட்டை நகலுடன் பயனாளிகள் ரூ.50- மட்டுமே செலுத்தி பழச்செடிகளை பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும் எக்டேர் ஒன்றிற்கு ரூ.18000- மானியத்தில் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கத்தில் மா, கொய்யா, தென்னை, எலுமிச்சை கன்றுகள் இடுபொருட்களுடன் வழங்கப்படவிருக்கிறது. இவ்வினத்திற்கு தேவையான பழச்செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்து வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், விவசாயிகள் தங்களது விவரங்களை http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா; அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu