திருச்சி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க.நிவாரண உதவி

திருச்சி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க.நிவாரண உதவி
X

திருச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. மாநகர் மாவட்ட  செயலாளர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண உதவி வழங்கினார்.

திருச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள 50-வது வார்டுக்கு உட்பட்ட வாமடத்தில் நேற்று இரவு 4 குடிசை வீடுகள் தீயில் எரிந்து கருகியது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்று காலை திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவர்களுக்கு அரிசி, பருப்பு, வேட்டி, சேலை மற்றும் பணம் ஆகிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கினார். இதில் மாநகர் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் பத்மநாதன், மீனவரணி செயலாளர் தென்னூர் அப்பாஸ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இலியாஸ், தில்லைநகர் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர். முஸ்தபா,உறையூர் பகுதி செயலாளர் பூபதி, மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்