திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ஊர்வலம்

திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ஊர்வலம்
X

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.

திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ஊர்வலம் இன்று நடைபெற்றது.

திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ஊர்வலம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த 1965ம் ஆண்டில் இந்தி எதிர்ப்பு போர் தீவிரமாக நடந்தது. இந்தி எதிர்ப்பு போரில் மாணவர்கள் தீவிரமாக களம் இறங்கினார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அப்போது இருந்த காங்கிரஸ் அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. பல இடங்களில் கலவரம் வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.

திருச்சியில் இந்தி திணிப்புக்கு எதிராக கீழப்பழுவூர் சின்னச்சாமி என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் விராலிமலை சண்முகம் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார். அவர்களது கல்லறை திருச்சி தென்னூர் அண்ணா நகர் அருகில் உள்ளது. இந்த கல்லறைகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ம் தேதி தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.மேலும் இந்த நாளை மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளாக இந்த கட்சிகள் சார்பில் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் இன்று திருச்சியில் திருச்சி மாநகர், புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மாணவர் அணிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ஊர்வலம் நடைபெற்றது. திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி. ரத்தினவேல், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி,புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. குமார், முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஆவின் தலைவர் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், கவுன்சிலர் அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் முடிவில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story
ai solutions for small business