அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது பெண் ஊராட்சி தலைவர் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது பெண் ஊராட்சி தலைவர் குற்றச்சாட்டு
X

ஸ்ரீநிதி சதீஷ்குமார்.

திருச்சி புறநகர் தெற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் மீது பெண் ஊராட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் திருநெடுங்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார். அ.தி.மு.க.வை சேர்ந்தவர். இவர் நேற்று தேவராயனேரியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியை வரவேற்றுள்ளார்.

இதன் காரணமாக அ.தி.மு.க. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தன்னை கட்சியை விட்டு நீக்கி விட்டதாகவும், அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் தன்னை பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

அதிமுக ஊராட்சி தலைவராக இருப்பதால், அமைச்சர் வந்தால் வரவேற்கக் கூடாதா? என்று இந்த பெண் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி